“நமக்கு எது வசதி என்பதில், எது சரி என்பதை மறந்துவிடுகிறோம்.”
*****
“வாழ்க்கையில் சம்பாதிக்கவேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை.”
*****
“குழந்தைகள் மீது செலுத்தும் கோபம்போல் கோழைத்தனம் ஏதும் இல்லை.”
*****
“நகைச்சுவை உணர்வு இல்லையென்றால் புத்திசாலிகூட மந்தபுத்தி உள்ளவன் ஆகிவிடுவான்.”
*****
“உலகில் தானாக முன்னேறியவர் யாரும் இல்லை.
நீ உழைக்கத் தயாராக இருந்தால் சிலர் உனக்கு உதவத் தயாராக இருப்பார்கள்.”
*****
“அழும்போது தனிமையில் அழு.
சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி.
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்.
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.”
*****
“சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான்
கறுப்பு மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை. “
*****