“என்ன நடந்துவிடுமோ என்று யோசித்து இருப்பதைவிட முண்டிப்பார்.
எழுந்தால் வெற்றி.
வீழ்ந்தால் அனுபவம்.”
*****
“காலத்தின் மதிப்பு உனக்குத் தெரிந்தால் வாழ்வின் மதிப்பும் தெரிந்துவிடும்.”
*****
“நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே. அதைவிட முட்டாள்தனமான விஷயம் ஏதுமில்லை.”
*****
“செல்வந்தராகிய பின் தர்மம் செய்வேன் என்றிருப்பதை விட, ஏழையாக இருக்கும் போதே தர்மம் செய்வது சிறந்தது.”
*****
“காதலுடன் பார்த்தால் சுமாரானது அழகாய்த் தெரியும். அழகானது பேரழகாய் தெரியும்.
காக்கையை மயிலாய் நினைக்க வைப்பதல்ல அன்பு
காக்கையை காக்கையாகவே ஏற்றுக்கொண்டு நேசிப்பது தான் உண்மையான அன்பு . “
*****
“எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அது உன்னிடமிருந்தால் திருத்திக்கொள்.”
*****