“நல்ல சொற்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
நல்ல செயல்கள் நம்மை மௌனமாக்குகின்றன.”
*****
“உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன்மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.”
*****
“வேகம் இல்லாத விவேகம், வெறும் கனவு.
விவேகம் இல்லாத வேகம், வேருடன் அழிவு.
விவேகத்துடன் இணைந்த வேகம், வெற்றி வாயிலின் நுழைவு.”
*****
“வட்டம் போட்டு வாழ்வது அல்ல வாழ்க்கை.
நேரத்துக்கு ஏற்றாற் போல
திட்டம் போட்டு வாழ்வதுதான்
சிறந்த வாழ்க்கை.”
*****
“வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான்.
கடமையைச் செய்தால் வெற்றி.
கடமைக்குச் செய்தால் தோல்வி.”
*****