“சிக்கல்களை எதிர்கொள்ளும்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.”
*****
“கண் மை பூசிய பெண்களை விட,
வாய் மை பூசிய பெண்களை விட,
எளிமை பூசிய பெண்கள் அழகாய் தெரிகின்றனர்.”
*****
“இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்.
ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.”
*****
“வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ, அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்.”
*****
“ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம். உன்னை தவிர உன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.”
*****