“மற்றவரை வாழ்த்துவதில் முதல் மனிதராய் இருங்கள்.
உற்றவரை ஊக்குவிப்பதில் முதல் மனிதராய் இருங்கள்.
சோகத்தில் பங்கெடுப்பதில் முதல் மனிதராய் இருங்கள்.
சொந்தங்களை அரவணைப்பதில் முதல் மனிதராய் இருங்கள்.
இனிதாய் பேசுவதில் முதல் மனிதராய் இருங்கள்.
இதயத்தால் அணைப்பதில் முதல் மனிதராய் இருங்கள்.
சிரிப்பினை வழங்குவதில் முதல் மனிதராய் இருங்கள்.
சிந்தனைகளை கொடுப்பதில் முதல் மனிதராய் இருங்கள்.
பாசத்தில் முதல் மனிதராய் இருங்கள்.
நேசத்திலும் முதல் மனிதராய் இருங்கள்.
எப்போதும் முதல் மனிதராய் இருங்கள் –
மற்றவர்கள் இதயங்களிலே உங்களை
‘முழு மனிதராய்’ வைத்திருப்பார்கள். “
*****
“ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!”
*****
“தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!”
*****