“வேஷம் இல்லாத உண்மையான அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து.
அந்த அன்பே பொய்யானால், உலகில் அதைவிடக் கொடிய நோய் வேறெதுவும் கிடையாது.”
*****
“உன்னை அளவின்றி புகழுகிறவன் ஏற்கெனவே உன்னை ஏமாற்றிவிட்டான். அல்லது இனி ஏமாற்றப் போகிறான்.”
*****
“நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்கத் துவங்குமுன் விலகி நிற்கக் கற்றுக் கொள்வது சிறந்தது.”
*****
“கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார்
அதில் துணிச்சல் தென்படும்,
அதை நீ புரிந்துக்கொண்டால் ,
துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக
உன்னை அலங்கரிக்கும்.”
*****
“அன்பை மட்டுமே
கடன் கொடுங்கள்..!
அது மட்டுமே
அதிக வட்டியுடன்
உங்களுக்குத்
திரும்பக் கிடைக்கும். “
*****