“பணத்தைத் தேடும் ஆர்வத்தில் பாசமானவர்களைத் தொலைத்துவிட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு பாசத்தை வாங்க முயல்கிறார்கள்.
தொலைத்துவிட்டு தேடாதீர்கள்.
பணத்தால் வாங்க முடியாதது உண்மையான அன்பு.”
*****
“‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதே.
‘என்னால் இயலாது’ என்று ஒருநாளும் சொல்லாதே.
ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.”
*****
“வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.”
*****
“மனிதா! நீயும் இயற்கையின் கூறே. இந்த இயற்கை வளமாக உள்ளவரையே நீயும் வளமாக வாழ்வாய்.”
*****
“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
விதியை நம்பி மதியை இழக்காதே.
மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.”
*****