“பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.”
*****
“இலகுவான வாழ்க்கைக்காக பிரார்த்திக்காதே.
துன்பங்கள் வரும்போது உறுதியாகச் சந்திக்கும் வல்லமை பெற பிரார்த்தனை செய்.”
*****
“கடவுள் சிற்பத்தை ஒரு ‘கல்’ என்பவர்கள், பணத்தை ஒரு ‘காகிதம்’ என்று ஒத்துக்கொள்வதில்லை.”
*****
“மரணத்தைப் பற்றி கவலைப்படாதே.
நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை.
அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை.
பிறகு எதற்கு கவலை”
*****
“அறம் என்பது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதலாகும்.
பொருள் என்பது நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதிப்பதாகும். இன்பம் என்பது உண்மை அன்பில் கருத்தொருமித்து தம்பதியராய் வாழ்வதாகும்.
வீடு என்பது இம்மூன்றையும் மறந்து கடவுளைச் சிந்திப்பதாகும்.”
*****