“கஷ்டப்படுகிறவனிடம் சிரிப்பு இருக்காது.
சிரிக்கிறவனிடம் கஷ்டம் இருக்காது.
கஷ்டத்தில் சிரிக்கிறவனிடம் தோல்வி இருக்காது.”
*****
“முயற்சிதான் வெற்றியின் முதற்படி என்றால் அந்த முதற்படி அடைய நீ முன்னூறு முறை தோற்றாலும் முயற்சியை இழக்காதே.”
*****
“உங்கள் வாழ்விலிருந்து பிரிந்து செல்பவர்களை அனுமதியுங்கள்.
அவர்களால் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.”
*****
“விட்டுக்கொடுங்கள், விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக்கொடுங்கள், தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.”
*****
“தியானம் செய்வதால் மனதிற்கும் உடலுக்கும் நல்லதொரு அமைதி, ஓய்வு கிடைக்கிறது.
தியானத்தினால் கிடைக்கும் அமைதியும் ஓய்வும், தூக்கத்தினால் கிடைக்கும் ஓய்வை விட மிகவும் பயனுள்ளதாகும்.
தியானம் என்பது ஒருவருடைய மனதை குணப்படுத்த பக்கவிளைவுகள் இல்லாத சரியான மருந்தாகும்.
தியானத்தை தொடர்ந்து செய்யும்போது நல்ல உடல் ஆரோக்கியமும், தெளிவான மன நிலையையும் அடையலாம்.”
*****