“ஜீவகாருண்யம் உள்ளவர்களிடம் தெய்வங்களும் பணிந்து நிற்கும்.
சத்தியமும் பொறுமையும் கொண்டவன் இந்த உலகை வெல்லுவான்.
மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்.
பாவச் செயலை யாருக்கும் தெரியாமல் செய்திருந்தாலும், அது மரணம் வரை நம் நெஞ்சில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கும்.
பொருள், சுற்றம், இளமை… இவைகள் உன்னிடம் இருப்பதாக கர்வப்படாதே. காலம் ஒரே நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும்.
பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததை வைத்துக்கொண்டு திருப்திப்படு.
உணர்ச்சி வெறி, கோபம், பற்று, பேராசை இவைகளையெல்லாம் துறந்து ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய். உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்.”
*****
“தன்னைக் காயப்படுத்தியவரை விட்டு மெளனமாக விலகிச் செல்பவர்தான் உண்மையான பக்குவநிலையை அடைந்தவராவர்.”
*****
“யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.”
*****