“பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவை,
ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்.”
*****
” மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.”
*****
“மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.
ஆனால், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.”
*****
“தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.”
*****
” நம்மை உயர்த்தும் 7 விஷயங்கள்:
ஏழ்மையிலும் நேர்மை.
கோபத்திலும் பொறுமை.
தோல்வியிலும் விடாமுயற்சி.
வறுமையிலும் உதவி செய்யும் மனம்.
துன்பத்திலும் துணிவு.
செல்வத்திலும் எளிமை.
பதவியிலும் பணிவு.”
*****