” பிரச்சனை என்னும் பூட்டு தயாரிக்கப்படும்போதே தீர்வு என்னும் சாவியும் தயாரிக்கப்பட்டுவிடுகிறது.”
*****
“வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு காரணமும் நாம்தான் மருந்தும் நாம்தான்.”
*****
“சொல்லுக்கும் செயலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்.
இரண்டும் வெவ்வேறு செயல்பாடுகளை வெளிப்படுத்தும்போது மற்றவர்களிடம் நம்மைக் குறித்து அவநம்பிக்கை ஏற்படுகிறது.”
*****
“ஒருவர் உன்னை உயர்த்திப் பேசும்போது விழிப்போடு இரு;
ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு;
புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு – எளிதில் வெற்றி பெறலாம்.
விட்டுக்கொடுங்கள் – விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக்கொடுங்கள் – தவறுகள் குறையும்.
மனம்விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.”
*****
“அகங்காரமற்ற அறிவும், தன்னலமற்ற தியாகமும், பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஒரு ஆணின் அழகு.”
*****
“உண்மையான அன்பில்தான் கோபமும் கட்டுப்பாடுகளும் அதிகம்.”
*****
“நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கப்படுவதில்லை.”
*****