“சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.
சுகமாகவே எந்நாளும் வாழ்ந்துவிடவும் முடியாது.
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்.”
*****
“இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம் ஆனால் தாழ்ந்து போவதில்லை.
ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசி வரை சாதிப்பதில்லை.”
*****
“உன்மேல் நம்பிக்கை வை, வெற்றி உன்னைத் தேடி வரும்.”
*****
“வாழ்க்கை தரும் பாடம்
1. எதுவும் சில காலம் தான்.
2. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.
3. நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே,
உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.
4. சிந்தனை செய், கோபப்படாதே.
5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,
அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போ.”
*****