“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும்.
கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்றுவிடலாம்.”
*****
“தோல்விகள் என்பது உன்னைத் தூங்க வைப்பதற்காக பாடும் தாலாட்டல்ல.
நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்.”
*****
“துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே.
காதலை நினைத்து வாழ்க்கையை இழக்காதே.
சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே.
தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே.”
*****
“நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி.
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே… உடலில் வலுவில்லையே…
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே…
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே… தயங்காதே…
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும்… பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.”
*****
“நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தன்னம்பிக்கையை காப்பாற்றுவது.”
*****
“தன்னம்பிக்கை உடையவர்களுக்கு வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.”
*****
“எவையொன்றும் வீணாக படைக்கபடவில்லை.
அவையெல்லாம் ஏதோ ஒரு முன்னேற்ப்பாட்டிற்காக படைக்கபட்டவையே.”
*****