கண்ணே கண்மணியே
முத்தே மரகதமே
உன்னை நினைக்கையிலே
சித்தம் மயங்குதம்மா
உணவும் இறங்குதில்லை
தூக்கமும் வருகுதில்லை
நாட்களும் போகுதில்லை
ஆமை போல நகருதம்மா
நிமிஷங்களும் கரையுதில்லை
நத்தை போல ஊருதம்மா
கண்ணை மூடும் போதெல்லாம்
உன் முகம் தான் தெரியுதம்மா
உன் சிரிப்பு சத்தம் காதுக்குள்ளே
ஒலித்துக்கொண்டே இருக்குதம்மா
இந்த மாமனுக்காக நீ செய்யும்
ஆயத்தங்கள் மயக்குதம்மா
உடம்பை பாத்துக்கம்மா
மனச தேத்திக்கம்மா
வண்ண வண்ண கனவெல்லாம்
நனவாகும் நாளும் வரும்
பெற்றோரும் உற்றோரும்
வாழ்த்தும் நாள் தூரமில்லை
என் கடமை முடிஞ்சதுவும்
செல்லமே உன்னை நான்
முத்தமிட்டு அணைத்திடவே
பறந்தோடி வந்திடுவேன்…………….