என் விழிகளுக்குள்
உன் விழிகள்
எதைத் தேடுகின்றன…
அதைத்தான்
கொன்று
கண்ணீரில் கரைத்து
சென்றுவிட்டாயே…
வௌிவேஷத்தில் மயங்கி
ஆடம்பரத்தின் பின்னே
ஓடிவிட்டாயே…
இழுத்து
பறித்து
துரத்திவிட்டாளோ!!!
மரித்துவிட்டது
தவறான இடத்தில்
நான் விதைத்த
காதல்…
புரிந்துவிட்டது
காதலிக்க தகுதியற்றவன்
நீ…
நினைத்தாயா
மூலையில் முடங்கியிருப்பேனென…
ஓடோடி வந்தாயா
காதலை புதுப்பித்து குளிர் காய…
பெண்ணை
அடக்கி வைத்த காலமல்ல இது…
விண்வௌிக்கும் சென்று வரும் காலம்…
தேங்கி நிற்க மாட்டாள்
நதி போல ஓடிக்கொண்டேயிருப்பாள்…
இன்னல்களும் இடையூறுகளும்
கண்ணீரை தந்தாலும்
அவை
தடைகள் அல்ல
அவளுக்கு…
சலனங்களுக்கும் சந்தேகங்களுக்கும்
அப்பாற்பட்டது
காதல்…
புரிதலும் விட்டுக்கொடுத்தலும்
தன்னகத்தே கொண்டது
காதல்…
நீ கொண்டதோ
மோகம்…
திருந்திவிடு
புதிய பாதை அமைத்துவிடு
இல்லையேல்
மாயவலையில் சிக்குண்டு
சீரழிந்து போவாய்…