பத்து மாதம்
என்னை
வயிற்றில் சுமந்த அம்மா!
நான்
நடந்து திரியும்வரை
உன் மடியிலும் கைகளிலும்
சுமக்க மாட்டாயா…
என்னை நீ வைத்திருக்கையிலே
பாட்டு பாடுகின்றாய்
கதை கேட்கின்றாய்
சிரிக்க வைக்கின்றாய்…
எல்லாவற்றிலும்
உனது அன்பை அனுபவிக்கின்றேன்…
உணவு ஊட்டும்போது
உனது பாசம் தெரிகிறது…
தூங்கும்போது தாலாட்டில்
நேசம் கொட்டுகிறது…
நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் அம்மா…
ஆனால்
நீ என்னை
அடுத்தவரிடம் கொடுக்கும்போது
பாசம் நேசம் தெரியவில்லை
கதைக்கவும் முடியவில்லை
அழுகைதான் வருகின்றது
என்னைப் புரிந்துகொள் அம்மா…