பார்த்ததும்
பதிந்துவிட்டான் நெஞ்சத்தில்
பரவிவிட்டான் உணர்வுகளில்…
பல நாட்கள் பழகியதுபோல்
புது உணர்வு ஊற்றெடுக்க
பரிதவித்து கலங்குகிறாள்
பேதையவள்
பெண் பார்த்து சென்றவனின்
பதில்தன்னை எதிர்பார்த்து…!!!
பெண் பார்க்கவென்று
படையெடுக்கும் உறவுகளே!
புரிந்து நடந்திடுங்கள்
பூப்போன்ற
பெண் மனதை…