நட்ட நடு வெயிலில்
நாத்து நடுகையிலே
பச்சப் பசும் நாத்து
கைகளிலே நழுவுதடி
பால் நிலவு போல முகம்
கண்களிலே விழுகுதடி
மேனி குளிருதடி
கட்டுடம்பு சிலிர்க்குதடி
கடைக்கண் பார்வையிலே
தென்றல் வீசுதடி
உதடுகளில் புன்சிரிப்பு
காந்தமாய் இழுக்குதடி
தை பிறப்பதெப்போ
தாலிக்கயிறு ஏற்பதெப்போ
பதில சொல்லடி புள்ள
என் மனசத் தொட்ட பைங்கிளியே!!!