
நிழலாய் தொடரும் துன்பங்கள்
விலகி மறையும்
மனத் துணிவு பார்த்து…
பனிபோல் படரும் கவலைகள்
உருகி அழியும்
மன வலிமை பார்த்து…
காணும் தோல்விகள்
ஓடி ஒழியும்
விடா முயற்சி பார்த்து…
வரும் தடைகள்
நொருங்கிப் போகும்
தன்னம்பிக்கை பார்த்து…
இவற்றுடன்
சிறப்பாய் அமையும் வாழ்க்கை
பொறுமை உடனிருந்தால்…!!!