மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை போராட்டம் தான் அவனது வாழ்க்கை.
குழந்தை பிறக்கும் போது மூச்சுக்காக போராடிக்கொண்டே பிறக்கின்றது. அந்த நிமிடத்திலிருந்து அழுகையையே ஆயுதமாகக்கொண்டு போராடி தன் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. சிறுவர் முதல் வயோதிபர் வரை பிடிவாதம் போராட்டத்தின் ஆயுதமாகிறது.
கல்வியை பெற்றிட
வேலை வாய்ப்பை பெற்றிட
தடைகளை தாண்டிட
சூழ்ச்சிகள் வென்றிட
தோல்வியில் எழுந்திட
போராட்டம் போராட்டம் போராட்டம்….
சமூக நலன் கருதி நீதி நியாயத்தை நிலை நாட்ட போரட்டம்.
தேவைக்கேற்ப போராட்டத்தின் வடிவங்கள் மாறுபடுகின்றன.
உண்ணாவிரதம், சாலை மறியல், பணி பகிஷ்கரிப்பு, ஊர்வலம் என கூறிக்கொண்டே போகலாம்.
வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் போராட்டம் நிறைந்ததே.
மனிதன் – விலங்குகளுடன், மனிதனுடன், சமூகத்துடன் மட்டுமல்ல இயற்கையுடனுமே போராடித்தான் வாழ்கிறான்.
நானும் இப் பதிவை நேரத்துடன் போராடித்தான் பதிவு செய்கிறேன்.