காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.
காதலின் பின் திருமணம், திருமணத்தின் பின் காதல் இரண்டும் ஒன்று என்று உணர்ந்து வாழ்ந்தால் எந்தவித மனக் குழப்பமும் இல்லை.
பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு நன்றாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புவார்கள். அந்த நம்பிக்கை பிள்ளைகளின் மனதில் பதியும்படி நடந்து, அதை பிள்ளைகளும் உணரும்பட்சத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர், தங்கள் சுயலாபம் கருதி நடாத்தும் திருமணங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.
அதேபோல காதல் திருமணத்தில் பணம், அந்தஸ்த்து, அழகு பார்த்து பிறக்கும் காதல் சில வெற்றி பெறுவதில்லை.
எனவே இருவகை திருமணங்களிலும் புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் இருவருக்குமிடையில் இருக்கும் மணவாழ்க்கை மகிழ்சிகரமாக இருக்கும் என்பது எனது கருத்து.