இருள் சூழ்ந்த பூமியினை
ஒளிரச் செய்யும் சூரியனே
உனது வருகைக்காக
எத்தனை எத்தனை உயிர்கள்
காத்திருக்கின்றன ஆதவனே
கடமை தவறா வீரனே
உன்னைக் கண்ணாரப் பார்த்து
வழிபட்ட காலங்கள் போய்விட்டன
நவீன உலகம்
உயர்மாடிகளால் நிரம்பிவிட்டது
மனக்கண்ணில் உன்னை நினைத்து
வழிபடுகிறேன்
ஏற்று அருள் செய் பகவானே
மனக்கண்ணில் நீ
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.