ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.
எமது உணவுமுறை, வாழ்க்கை முறை (சுற்றுச்சூழல் சுத்தம்) சரியானதாக இருந்தால் நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருக்கும். சாதாரண நோய்களுக்கு (சளித் தொல்லை, காய்ச்சல், மலச்சிக்கல், சிரங்கு, …) வீட்டிலே கிடைக்கும் பொருட்கள், இலை வகைகளை மருந்தாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். பக்கவிளைவுகள் இருக்காது.
சில மருத்துவ தேவைகளுக்கு ஆங்கில மருத்துவ முறையே அத்தியாவசியமாக உள்ளது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி
பிரசவம்
சத்திர சிகிச்சை
விபத்துக்கள் போன்றவை.
தோல் வியாதிகள், ஆஸ்த்துமா, கை கால் நோ (வலி) போன்ற நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறை சிறந்தது ஆனால் மெதுவாகவே சுகம் வரும். எனவே விரைவில் குணமடைவதற்கு மக்கள் ஆங்கில மருத்துவ முறையையே நாடுகிறார்கள்.