மலர்களை பார்க்கும்போதெல்லாம்
அங்கு
உன் முகம் தெரியுதடி…
தென்றல் வீசும்போதெல்லாம்
அதில்
உன் சுவாசம் வருகுதடி…
தனிமையில் இருக்கும்போதெல்லாம்
அருகே
உன் குரல் கேட்குதடி…
இரவில் துயிலும் போதெல்லாம்
கனவில்
உன் எழில் உலவுதடி…
உன்னை நினைக்கும்போதெல்லாம்
காதலில்
என் உள்ளம் மலருதடி…