வண்டினத்திற்கு
விருந்து படைத்து
மாந்தர்
விழிகளுக்கு விருந்தாகி
நோய்களுக்கு மருந்தாகி
இறைவனுக்கும்
விருந்தாகும்
மலர்…
பெண்களின்
தோழியாகி உவமையாகி
கூந்தலிலே கொலுவிருந்து
தோள்களிலே தவழ்ந்திருக்கும்
மலர்…
காதலரின்
சின்னமாகி தூது சென்று
திருமணத்தில் மாலையாகும்
மலர்…
மனிதர்களின்
பூதவுடலுக்கு துணையாகி
இறுதிவரை உடனிருக்கும்
மலர்…
இறைவனின்
பூஜை பொருளாகி
திருவடிகளை சரணடையும்
மலர்…
மண்ணுக்கு
உரமாகும்
மலர்ந்த அன்றே மடியும்
மலர்…
மலரே!
ஒரு நாள் வாழ்வில்
உனது சேவைகள் எத்தனை…!!!
பல வருட வாழ்வில்
நாம்
சுயநலமாய் வாழாது
இயலுமான
சேவைகள் பல செய்து
இறைவனடி சேர்வோம்
உன்னை நினைத்து…