வண்ண வண்ண பூக்கள் சொரிந்து
முட்களும் இடையிடையே பதிந்து
வாழ்க்கை போராட்டமானது
காதல் வந்தபோது…
சமாதான புறா பறந்து திரிந்து
வெற்றிக்கொடி நாட்டி
வாழ்க்கை அமைதியானது
திருமணம் நடந்தபோது…
ஆயிரமாயிரம் தாரகைகள் தோன்றி
நூறாயிரம் பூக்கள் மலர்ந்து
பல்லாயிரம் பறவைகள் கானமிசைத்து
வாழ்க்கை ஔிவீசி இனிமையானது
மழலை பிறந்தபோது…