விண்ணுக்கழகு
வெண்ணிலவும் வௌ்ளிகளும்
ஓடித்திரியும் மேகங்களும்…
மண்ணுக்கழகு
மலர்களும் மலைகளும்
கொட்டும் அருவிகளும்…
பெண்ணுக்கழகு
அடக்கமும் பொறுமையும்
சூடிடும் புன்னகையும்…
ஆணுக்கழகு
பொறுப்பும் கடமையும்
அஞ்சா வீரமும்…
அழகு தருவது
ஆனந்தம் மட்டுமல்ல
உள்ளத்திற்கு சாந்தம்
உடலுக்கு சுகம்…
இயற்கையின் அழகு
கெட்டுவிட்டால்
கெட்டுவிடும்
மாந்தரின் அழகு…!!!
ஆகையால்
மாசுபடுத்தாதீர்
மண்ணை மட்டுமல்ல
விண்ணையும் தான்!!!