உத்தரவின்றி
உள்ளே வந்தாய்…
அதிர்ச்சியில் உறைந்த கணப்பொழுதில்
பல மாற்றங்கள் செய்துவிட்டாய்…
விழிகளை நிறுத்தி
உன்னையே சுற்றவிட்டாய்…
உதிரத்தில் கலந்து
இதயத் துடிப்பையே கூட்டிவிட்டாய்…
என்னை அழித்து
சிந்தையில் உன்னை பதித்துவிட்டாய்…
மூச்சுக் காற்றினில் கலந்து
எந்தன் உயிராய் மாறிவிட்டாய்…