பொன்னான நேரம் வீணாக்காது
பொறுப்புடன் எல்லோரும்
பயனுற செலவழிப்போம்…
இழந்துவிட்ட நேரத்தை
மீண்டும் பெற முடியாது…!!!
அடுத்தவர் மனம் நோகாது
சிந்தித்து நிதானமாக
அளவுடனே பேசிடுவோம்…
கொட்டிவிட்ட வார்த்தைகளை
மீட்டுவிட முடியாது…!!!
ஒழுக்கத்துடன் கல்வி கற்று
அறவழியில் உழைத்து
பேரோடு புகழும் பெற்றிடுவோம்…
கடந்துவிட்ட இளமையை
மீண்டும் அடையமுடியாது…!!!
பேராசை கொள்ளாது
கிடைக்கும் நல்ல தருணங்களை
பயன்படுத்தி வாழ்ந்திடுவோம்…
நழுவவிட்ட வாய்ப்புக்கள்
மீண்டும் வரமாட்டாது…!!!