உன் ஜனனம்
எனக்கு மறுபிறவி தந்தது…
உன் அழுகை சத்தம்
என்னை விழிக்கச் செய்தது…
என் மடியினிலே
நீ தவழ வேண்டும்…
என் தோள்களிலே
நீ தொங்க வேண்டும்…
என் முதுகினிலே
நீ சாய்ந்தாட வேண்டும்…
என் கால்களை
நீ கட்டிக்கொள்ள வேண்டும்…
ஆயிரமாயிரம் ஆசைகள்
இதயத்தில் பொங்க
மீண்டும் பிறந்து வந்தேன்
புதிய பிறவி எடுத்து வந்தேன்
கண்ணம்மா…!!!