கூந்தலில் தவழும் மலர்கள்
தோள்களை தொட்டு ஊஞ்சலாடும் காதணிகள்
கைகளில் குலுங்கும் வளையல்கள்
பாதங்களில் துள்ளும் கொலுசுகள்
இடையிலே கொஞ்சும் தாவணி
யாவும்
என்னை அழைக்கவில்லை…
தேவகானமாய் அவளது சிரிப்பொலி
என்னை அழைத்து
மயக்கும் அவளது பார்வை
வசியம் செய்து
என்னுள்ளே வந்துவிட்டாள்…!!!
என் மூச்சுடன் கலந்துவிட்டாள்!!!