செல்லுமிடமெல்லாம்
முன்னே நின்று
சிந்தையை கலைத்து
இம்சை செய்கின்றான்…
என் விழிகளைப் பறித்து
தன் முகத்தினில் பதித்து
கன்னம் குழிய புருவம் உயர்த்தி
ஏதேதோ சொல்கின்றான்
என் பதிலை
யாசித்து நிற்கின்றான்…
இதயம் பறந்து செல்லத்
துடிக்கின்றது
மனமோ பயத்தில் இழுத்துப்
பிடிக்கின்றது…
விலகலில்
காதலின் ஆட்சியில்
இதயம் மருக
காண்கையில்
பயத்தின் பிடியில்
மனமோ தயங்க
போராட்டமே வாழ்க்கையானது…!!!
சிக்கிக் கசங்கும்
காதலை காக்க
எதிரியை அழித்து
காதலை வாழ வைக்க
வந்துவிட்டான் மன்மதன்
மன்மத அம்புகளுடன்!!!