பிறந்து தவழ்ந்து
வளர்ந்து வாழ்ந்து
மடிகின்றோம்
பூமித்தாய் மடியினிலே…
பொறுமையின் சிகரமானவளை
சோதிக்கலாமா…
உயிர்களைத் தாங்கியிருப்பவளை
வஞ்சிக்கலாமா…
பயிருக்காய் கொத்துகிறோம்
நீருக்காய் வெட்டுகிறோம்
மரங்களுக்காய் தோண்டுகிறோம்
வசிப்பதற்காய் கிண்டுகிறோம்
இவைதானே வேண்டும் நமக்கு…
பேராசை வேண்டாமே…
கட்டிடங்கள் விண்ணைத் தொட
பாதாள கிடங்குகள் மண்ணடியில்…
அபிவிருத்தி என்ற பெயரில்
மேனியெங்கும் புண்ணாக்க
அவள் நடுங்குவது தெரிந்தும்
அலட்சியம் ஏன்…
அளவுக்கதிகமாக
உல்லாச விடுதிகள்
கேளிக்கை மாளிகைகள்
தேவையா…
அளவோடு பெற்று
வளமோடு வாழலாம்…
அளவுக்கு மிஞ்சினால்
அழிவு நிச்சயம்…