பெண்ணே!
மலர் நீ
மென்மையானவள்…
இறைவனின் பிரதிநிதி நீ
உலகிற்கு உயிர்களைத் தருபவள்…
குழந்தைகளின் காவல் தெய்வம் நீ
பாதுகாக்கப்பட வேண்டியவள்…
சுதந்திரம் உனக்கு
கல்வி கற்று அறிவை வளர்ப்பதற்கு
அரைகுறை ஆடையில் பவனி வருவதற்கல்ல…
குடும்பத்திற்கு உதவும் வகையில் கற்றது பயன்தருவதற்கு
முறைகேடான உறவுகளை ஏற்படுத்துவதற்கல்ல…
குடும்பத்திற்கும் உலகிற்கும் தேவையான கருத்துக்கள் பகிர்வதற்கு
கலகம் உண்டாக்குவதற்கல்ல…
கிடைத்த சுதந்திரத்தை முறையாக கையாண்டு
சந்ததிக்கு வழிகாட்டியாக தலைநிமிர்ந்து கௌரவமாக வாழ்வோம்…