வௌ்ளை உள்ளத்தில்
கொட்டிவிட்டாய் வண்ணங்கள்…
நவரத்தினமாய் பதிந்திருந்து
போடுகிறாய் கோலங்கள்…
உன்னைச் சுற்றியே
வலம் வரும் எண்ணங்கள்…
வரைகிறது
அழகிய கவிதை வரிகள்…
கனவுகளில்
நீ தரும் சின்னங்கள்…
நினைத்ததும்
சிவந்திடும் கன்னங்கள்…
வானவில்லாய் வந்து
என் வாழ்வை
வண்ணமயமாக்கிவிட்டாய்!!!