தனியாக விட்டதென்ன
நியாயம் கண்ணா…
பிரிந்தது போதும் தவித்தது போதும்
துயரம் துடைப்பதற்கு
விரைந்து வா கண்ணா…
கவலையின்றி பாடித்திரிந்து
மகிழ்ந்தோம் கண்ணா…
யார் கண் பட்டதுவோ
எவர் கேடு நினைத்தாரோ
மாயமாய் எனை விட்டு
மறைந்தாய் கண்ணா…
கனவிலே உனை நினைத்து
வாழ்கிறேன் கண்ணா…
எனை மறந்தாயோ
எவர் தடுத்தாரோ
தடைகளை உடைத்து நீயும்
வாராய் கண்ணா…!!!