அருள் வடிவானவனே!
அடியவர் குறை தீர்ப்பவனே!
அழகு மயில் வாகனனே!
அலைபாயும் அடியவர் மனதில்
அமைதி தந்து
அருள்புரிய வா முருகா!
குன்று தோறும் வீற்றிருப்பவனே!
குங்கும வர்ணம் கொண்டவனே!
குறவள்ளி நாயகனே!
கும்பிடும் பக்தர்களின்
குறை தீர்த்து
குலம் காக்க வா கந்தா!
சூரிய ஒளியாய் திகழ்பவனே!
சூரவேல் கொண்டு அசுரர் தலைவன்
சூரனை அழித்தவனே!
சூழ எம்முடன் இருக்கும்
சூரர்களை அழித்தொழிக்க
சூரவேல் கொண்டு வா வேலா!
நின் கருணை வேண்டி நின்று
நித்தம் உன்னை வணங்குகின்றேன்
நின் திருநாமங்களை மலர்களாக
நின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து
நின் திருவடியை சரணடைந்த என்னை
நின் கருணைக் கடலில் இணைத்திட வா குமரா!