இயற்கையின் சீற்றங்கள்
மனிதரின் போராட்டங்கள்
பிரித்துச் சென்ற உறவுகளை
இணைத்து மகிழ்ந்திடு…
பறித்துச் சென்ற உறவுகளை
நினைந்துருகும் உயிர்களுக்கு
அமைதி தந்து வளர்ந்திடு…
தீய எண்ணங்கள் அழிந்திடும்
மனமாற்றம் வந்திட
வழிசமைத்து நகர்ந்திடு…
துயரங்களை தாங்கி வாழும்
சக்தியை கொடுத்து
மனங்களை வென்றிடு…
அன்புமழை பொழிந்து
அறவழியில் வாழ்வதற்கும்
இயற்கையோடு இணைந்து
எளிமையாக வாழ்வதற்கும்
மனப்பக்குவத்தை கொடுத்து
புதிய சரிதம் படைத்து சென்றிடு…