“சொல்லால், செய்கையால், சிந்தனையால் கொல்லுதல்..! உயிர்க்கொலை செய்வது மட்டும் கொலையல்ல. நன்றி மறப்பதும் ஒரு வகைக் கொலையே. பிற உயிர்களை அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்தலும் ஒருவகைக் கொலையே. வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிவது, செய்யும் வேலைக்குச் சரியான ஊதியம் கொடுக்காமல் விடுவதும் ஒரு வகைக் கொலையே. ஒருவரை நம்ம வைத்து ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமும் ஒரு வகைக் கொலையே. ஆக சொல்லால் கொல்லுதல், செய்கையால் கொல்லுதல், சிந்தனையால் கொல்லுதலும் கொலைகளே. அன்பு தான் எல்லாவற்றிக்கும் ஆதாரம். […]
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த நிலப்பகுதியை காடு என்கின்றோம். காட்டில் மரங்களுடன் விலங்குகளும் வாழ்கின்றன. ஒரு நாட்டுக்கு காடு மிகவும் இன்றியமையாததாகும். காடுகள் பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும் மழை பொழியச் செய்கின்றன. வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகின்றன. மண்ணரிப்பைத் தடுக்கின்றன. காடுகள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனைத் தருகின்றன. பல நோய்களுக்கு மருந்தாகும் அரியவகை மூலிகைகளைக் கொண்டுள்ளன.