“எல்லா உண்மைகளையும் நீங்கள் சொல்லவேண்டும் என்பதில்லை.
ஆனால் சொல்பவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்.”
*****
“நல்லவராக இருப்பது நல்லதுதான்
ஆனால்
நல்லது கெட்டது தெரியாத
நல்லவராக இருப்பது ஆபத்தானது”
*****
“பெருமளவு மக்கள் பட்டினி கிடப்பது உணவுப் பற்றாக்குறையினால் அல்ல,
மனித மனங்களில் அன்பும், அக்கறையும் பற்றாக்குறையாகி விட்டதால்.”
*****
“பிறருடைய துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.
இப்பழக்கம் நம் துன்பங்களைச் சகித்துக்கொள்ள முதல் பாடமாகும்.”
*****
“முதுகுக்குப்பின் ஒரே காரியம்தான் செய்யவேண்டும்’
அது முதுகைத் தட்டிக்கொடுப்பதாய் இருக்க வேண்டும்.”
*****