“தெய்வ அருளில் நம்பிக்கையின்மைதான் கவலை என்பது.
உன்னுடைய சமர்ப்பணம் முழுமையாக இல்லை என்பதையே அது காட்டுகிறது.
எனவே, செய்வதையெல்லாம் நேர்மையுடன் செய்துவிட்டு, விளைவுகளை இறைவனின் பொறுப்பில் விட்டுவிடு.”
*****
“உனது துயரங்களை பிறரிடம் கூறாதே.
பலர் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள், சிலர் அதில் மகிழ்ச்சியும் அடைவர்.”
*****
“பிடிக்கவில்லை என்றால் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்துவிடு.
ஆனால் துரோகியாய் நொடியேனும் மாறிவிடாதே.”
*****
“ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே.
எவ்வளவு சொல்லியும் பயனில்லை என்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே.”
*****
“உலகத்தில் உன்னைவிட பெரியவன் யாருமில்லை. அதனால் நீ யாருக்கும் பயப்படாதே.
அதேபோல் உன்னைவிட சின்னவன் யாருமில்லை. அதனால் யாரையும் தாழ்வாக நினைக்காதே.”
*****