பச்சைக் கம்பளத்துள்
செஞ்சூரியன் மறைந்திட…
விண்ணிலே பதிந்திருந்த
வைரங்கள் ஔிர்ந்திட…
ஏகாந்தமாய் உலாவர
புறப்பட்டுவிட்டாள்
பஞ்சுப் பொதிகளிடையே
ஔிந்திருந்த முழுமதி…!!!
களையிழந்த விண்ணுலகம்
கணப்பொழுதில்
அழகானதை பார்த்து
மௌனமாய்
ரசித்து மகிழ்கிறாள்
கவிதைகள் புனைகிறாள்
பூமகள்!!!