பெண்ணே!
உன்னை பார்த்தபோது
ரோஜா என பெயரிட்டேன்…!!!
மலர்களின் அரசி
நீயென தோன்றியதால்!!!
உன்னுடன்
பேசிப் பழகியபின்
பஞ்சவர்ண கிளியும்
நீயேயென முடிவு செய்தேன்…!!!
கொஞ்சும் மொழியில்
நீ பேசியதால்!!!
பல நாட்கள்
பிரிவின் பின்
என் வாழ்க்கைத்துணை
நீயேயென உணர்ந்துவிட்டேன்…!!!
என் கனவிலும்
நீ உலவியதால்!!!