வானத்தில் வெண்ணிலா
குளிரொளி வீசுகிறாள்
தொலைவில் இருந்துகொண்டே
உள்ளத்தை கவர்கிறாள்…
பூமியில் பெண்ணிலா
வெப்பம் பரப்புகிறாள்
அருகில் செல்லச் செல்ல
தீயாய் எரிக்கிறாள்…
பெண்ணே!
வெண்ணிலவாய் மாறிவிடு
என் உள்ளத்தில் பதித்திடுவேன்…!!!
உன்னை தாங்கும் வானமாய்
என்றென்றும் நானிருப்பேன்!!!