பெண்ணே!
விடியல் வருவதே
உன்னை பார்ப்பதற்குத்தான்…
என் இதயம் செலுத்தும்
மன்மத அம்புகளை
தயக்கம்
தடுத்து வீழ்த்துகிறது…
என் காதலுக்கு
எதிரியாய் நிற்கிறது…
அன்னநடை பயின்று
மெதுவாகவே வரும்
ஆதவனும்
உன்னை நான் பார்த்ததும்
வேகமாக
சென்று மறைகிறான்…
என் காதலுக்கு
சதி செய்கிறான்…
பரிமாற்றங்கள் நிகழாமலே
காலமும் செல்கிறது
காதலும் காத்திருக்கிறது…!!!
கண்ணே!
எனை நோக்கி ஓரடி
எடுத்து வைப்பாயா
காதலுடன்…
தயக்கத்தை உடைத்தெறிந்து
வந்திடுவேன் உன்னருகே
காதல் சொல்ல!!!