பால் வண்ண கரை தைத்த
நீல வண்ண ஆடை உடுத்தி
சுழன்று சுழன்று வருகின்ற
மங்கையவள்
நின்றுவிட்டாள் கரையோரம்…!!!
கண்ணாளனை
தொட்டதில் சிலையானாளா…
தழுவியதில் மதி மயங்கினாளா…
நேரம் காலம் இல்லாமல்
மீண்டும் மீண்டும் வருகின்றாள்
தொட்டுத் தழுவி மகிழ்கின்றாள்…
நாணத்தை வென்றுவிட்டதோ
காதல்!!!