“பூனைக்கும் எலிக்குமான ஓட்டப் பந்தயத்தில், பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது.
ஏனென்றால் பூனை உணவுக்கு ஓடுகிறது. எலி உயிருக்கு ஓடுகிறது.
தேவையை விட குறிக்கோளே திறமையை அதிகம் வெளிப்படுத்தும்.”
*****
“இந்த உலகம் நீ நன்மை செய்யும்போது உன்னைக் கவனிக்காது.
தீமை செய்யும்போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது.”
*****
“தன்னைக் காயப்படுத்தியவரைவிட்டு மௌனமாக விலகிச் செல்பவர்தான் உண்மையான பக்குவநிலையை அடைந்தவராவர்.”
*****
“தவறே செய்யாத மனிதன் இல்லை.
தவறை திருத்திக்கொள்ளாதவன் மனிதனே இல்லை.”
*****
“முடியும் என்பது மூலதனம்.
முடியாதென்பது மூடத்தனம்.”
*****
“கடவுள் எங்கும் இருக்கிறார். எல்லாம் கடவுள் தான். ஊருக்கு நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ, செம்பையோ நட்டு அங்கே தான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக என்றால் சமுதாய ஒற்றுமை ஏற்படுவதற்காகத் தான்.
கோயில் வழிபாட்டால் ஊரில் ஒற்றுமை ஏற்படுகிறது. வீட்டில் எல்லாரும் சேர்ந்து வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை உண்டாகிறது.”
*****