“தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்க வேண்டாம். அதன் மூலம், மனிதன், தான் விரும்பும்படியே ஆகிறான். அனுபவத்தில் யார் வேண்டுமானாலும் இதனை உணர முடியும்.”
*****
“உள்ளத்தில் இன்ன எண்ணங்களைத் தான் வளர்க்க வேண்டும். இன்ன எண்ணங்களை வளர விடக்கூடாது என்று நிச்சயிக்கும்
அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்பவன் நல்லவனாக வாழ்வான். “
*****
“எதையும் நினைத்த மாத்திரத்தில் சூட்டோடு செய்யும்போது அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்ட பிறகு செய்யப்போனால் பலன் குறைந்து போகும்.
எந்தச் செயலுக்கும் நாள், நட்சத்திரம், லக்னம் பார்ப்பது மூடத்தனம். இதனால் உண்டாகும் காலம், பொருள் விரயத்திற்கு எல்லையே கிடையாது.”
*****
“மனிதனுக்குப் பகை வெளியில் இல்லை. அவனுக்குள்ளேயே பயம், சந்தேகம், சோம்பல் முதலிய எதிரிகள் மலிந்து கிடக்கிறது. இந்தக் குணங்கள் வெற்றியைத் தடுக்கும் உட்பகைவர்களாக உள்ளன.
நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்ன என்றால் விடாமுயற்சி. நிலைத்த நம்பிக்கை இருக்குமானால் செயல்கள் ஒருபோதும் தடைபடுவதில்லை.”
*****
“கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் நன்மைக்கான வழிவகைகளை நன்றாக உணர்ந்தும், தீமையை உதறும் மனவலிமை இல்லாதவனாகத் தத்தளிக்கிறான்.”
*****