“வாழ்க்கையில் நல்ல பாடங்களை கற்றுக்கொடுப்பது
வாத்தியார் மட்டுமல்ல. வந்து செல்லும் சில உறவுகளும் தான்.”
*****
“கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.
உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு.”
*****
“எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலதான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.
அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.”
*****
“ஆசிரியர்கள் கதவைத் திறப்பார்கள்.
ஆனால், நீங்கள் தான் உள்ளே நுழைய வேண்டும்.”
*****
“ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும். இதற்கீடான பொருள் உலகத்தின் எந்தச் சந்தையிலும் இல்லை.”
*****